கரோனா: மேலும் 89,706 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 89,706 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது. 
corona
corona


புது தில்லி: நாடு முழுவதும் மேலும் 89,706 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது. 
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 89,706 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,70,128-ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,115 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 73,890-ஆக அதிகரித்தது. 
கரோனா தொற்றில் இருந்து இதுவரை 33,98,844 பேர் மீண்டுள்ளனர். மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 77.77 சதவீதமாகும். உயிரிழப்பு விகிதம் 1.69-ஆக குறைந்துள்ளது. 8,97,394 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மொத்த பாதிப்பில் 20.53 சதவீதமாகும். 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல்படி, செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 5,18,04,677 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 11,54,549 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
5 மாநிலங்களில் அதிகம்: மொத்தம் சிகிச்சை பெற்று வரும் 8,97,394 பேரில் 61 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 
பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கவில்லை-ஐசிஎம்ஆர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
நாடு முழுவதும் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரை இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறை, கரோனா கிருமிகளைக் குறைப்பதில் எந்த வகையிலும் உதவவில்லை என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com