மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தை  நசுக்கிவிட்டன: ராகுல் காந்தி 

மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கிவிட்டன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்று வீழ்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


புதுதில்லி: மோடி அரசின் கொள்கைகள் இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கிவிட்டன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வரலாற்று வீழ்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான  ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில்,  “ மோடி அரசு வகுத்த கொள்கைகளால்தான் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்தார்கள் நாட்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாற்று சரிவை ஏற்படுத்தியுள்ளன. 

மோடி அரசின் கொள்கைகள் இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை  நசுக்கிவிட்டன. இளைஞர்களின் குரல்களை அரசு கவனிக்க வைப்போம்” என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பதிவில், “ பேரழிவுகளை உருவாக்கும் ஒவ்வொரு கொள்கைகளால், பாஜக அரசு, கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதரத்தை பறித்துவிட்டது, இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது.

இந்தியா கடுமையான வேலையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் உறுதியான திட்டம் எதுவும் இல்லை. நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்  இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்துவிட்டது.  இந்த அரசு மக்களின் தேவைகளுக்கு செவி சாய்க்காத முற்றிலும் உணர்ச்சியற்ற இந்த அரசால், இன்று, வேலையின்மை எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. 23.9% முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை அதிகரித்துள்ளது.  தொற்றுநோய்க்குப் பிறகு வேலையின்மை நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள், ஆனால் இந்த அரசு அலட்சியமாக உள்ளது. எனவே வேலைக்காக குரல் கொடுப்போம் எனும் பிரச்சாரத்தில் இணையுங்கள். பாஜக அரசின் தவறான சாதனைகளை எதிர்த்து உங்களின் குரலை எழுப்புங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com