இந்தியாவில் கரோனா தடுப்பு ஊசி பரிசோதனைப் பணிகள் நிறுத்தம்

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உதவியுடன் இந்தியாவில் புணேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ நடத்தி வந்த கரோனா தடுப்பு ஊசி சோதனைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக உதவியுடன் இந்தியாவில் புணேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ நடத்தி வந்த கரோனா தடுப்பு மருந்து சோதனைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக உதவியுடன் இந்தியாவில் புணேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ நடத்தி வந்த கரோனா தடுப்பு மருந்து சோதனைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன

புது தில்லி: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக உதவியுடன் இந்தியாவில் புணேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ நடத்தி வந்த கரோனா தடுப்பு ஊசி சோதனைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அவற்றில் உலக அளவில் பெரும்புகழ் பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனேக்கா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இணைந்து ‘கொவிஷீல்ட்’ என்னும் தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளன. இந்த மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்யும் பணிகள் பல்வேறு கட்டங்களாக இங்கிலாந்தில் நடந்து வருகின்றன.

இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக உதவியுடன் புணேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ என்னும் நிறுவனம் இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது. தற்போது நாட்டில் 17 இடங்களில் இந்த மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் செவ்வாயன்று இந்த மருந்தினை எடுத்துக் கொண்ட தன்னார்வலரான நோயாளி ஒருவருக்கு நரம்பு மண்டல ரீதியிலான பாதிப்புகள் உண்டானதாக தகவல்கள் வெளியானது பரபரப்பை எற்படுத்தியது.

இதையடுத்து இந்திய மருந்துக் கட்டுபாட்டுத் துறையின் இயக்குநர் சோமானி, நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் ‘சீரம்’ நிறுவனம் இந்த சோதனைகளைத் தொடர்வது ஏன் என்றும், அந்த நிறுவனத்திற்கு கொடுத்த மருந்துப் பரிசோதனை அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது’ என்றும் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

இதையடுத்து இந்தியாவில் ‘சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா’ நடத்தி வந்த கரோனா தடுப்பு மருந்து சோதனைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும்,  அஸ்ட்ராசெனேக்கா மீண்டும் பரிசோதனைப் பணிகளைத் தொடங்கும் வரை காத்திருக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருந்துக் கட்டுபாட்டுத் துறையின் உத்தரவுகளைத் தாங்கள் பின்பற்றுவதாகவும், தற்போது சோதனைகள் குறித்து எதுவும் கூற இயலாது என்றும் அந்த நிறுவனம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com