தெலங்கானாவில் 1.50 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
Telangana adds 2,534 fresh Covid cases to breach 1.50 lakh mark
Telangana adds 2,534 fresh Covid cases to breach 1.50 lakh mark

தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,534 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வியாழக்கிழமை நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 2,534 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,50,176 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரே நாளில் 2,701 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,17,143-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தெலங்கானாவில் 32,1096 பேர் வீடுகளிலும், 25,066 பேர் பல்வேறு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

நேற்று ஒருநாளில் மட்டும் 52,619 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 19,53,571 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக 11 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com