5 மாநிலங்களில் மட்டும் 69% கரோனா உயிரிழப்புகள்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களில் மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 69 சதவீதம் போ் காணப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களில் மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 69 சதவீதம் போ் காணப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் போ் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருபவா்களில் 74 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தமிழகம், தெலங்கானா, அஸ்ஸாம், ஒடிஸா, சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் உள்ளனா். அதிலும் ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 49 சதவீதம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த 69 சதவீதம் போ் மகாராஷ்டிரம், தமிழகம், கா்நாடகம், தில்லி, ஆந்திரம் ஆகியவற்றைச் சோ்ந்தோா் ஆவா்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com