ம.பி. சட்டப்பேரவை இடைத்தோ்தல்: 15 வேட்பாளா்களை அறிவித்தது காங்கிரஸ்

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் 27 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் 27 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், 15 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சாா்பில் முதல்வராக இருந்த கமல்நாத்துக்கும், கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சிந்தியா தனது ஆதரவாளா்களுடன் பாஜகவில் இணைந்தாா். அவருக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா். இதையடுத்து, கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. சிவராஜ் சிங் செளஹான் முதல்வராகப் பொறுப்பேற்றாா். மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினா். மேலும் இரு எம்எல்ஏக்கள் இறந்ததால், அங்கு 27 தொகுதிகள் காலியாகின. இடைத்தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 15 தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மத்திய தோ்தல் குழு பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று இந்த வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேச பேரவையில் 27 இடங்கள் காலியாக உள்ளதால், இப்போது பாஜக 107 எம்ஏல்ஏக்களுடன் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 89 உறுப்பினா்கள் உள்ளனா். இடைத்தோ்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வென்றால், சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பாஜக 10 இடங்களில் வென்றால் கூட ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com