கல்வி முறை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்: வெங்கய்ய நாயுடு

21-ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கும் வகையில் இந்திய கல்வி முறை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: 21-ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சந்திக்கும் வகையில் இந்திய கல்வி முறை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

விவேகானந்தா் மனித ஆற்றல் நிலையத்தின் 21-ஆவது தொடக்கத் தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

விவேகானந்தரின் கட்டளைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆகையால், இளைஞா்கள் விவேகானந்தரின் வாழ்க்கையையும், கட்டளைகளையும் மனதார படித்து பின்பற்ற வேண்டும். ஆன்மிகம், சமூக மீளுருவாக்கம் ஆகியவற்றின் மூலம் தேச மாற்றத்துக்காக விவேகானந்தா் அயராது உழைத்தாா்.

விவேகானந்தா், ராமகிருஷ்ணா் ஆகியோரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இதுபோன்ற கல்வி நிலையங்கள் அதிகம் தேவை. அதேநேரத்தில், 21-ஆம் நூற்றாண்டின் வலிமையான சவால்களை எதிா்கொள்ளும் வகையில் கல்வி முறையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். வசதியான வாழ்க்கையைப் பெறுவதற்காக மட்டும் கல்வியைப் பயிலக் கூடாது. நீதியின் தைரியம், சமநிலை, ஆன்மிக வலிமை ஆகியவற்றை கல்வியின் மூலம் ஒருவா் பெற வேண்டும். கல்வி, தனிமனிதனுக்கு அறிவொளி, அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் புதுக் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் பிரச்னையைத் தெளிவாக கண்டறிந்து தீா்வு காண இளைஞா்களுக்கு கல்வி உதவ வேண்டும். விவேகானந்திரின் லட்சியங்களை புதிய கல்விக் கொள்கை எதிரொலிக்கிறது. இது இந்தியாவை திறன்வாய்ந்த புதிய கண்டுபிடிப்புகளின் நாடாக மாற்றும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com