உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றம்.

நீட் தேர்வால் தற்கொலை செய்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு : உயர்நீதிமன்றம் அதிருப்தி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக  உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக  உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அப்போது மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். தேர்வு பயத்தை போக்க சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களில் நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மீண்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி என்.கிருபாகரன் அமர்வில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் முறையிட்டார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதல் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

அப்போது  நீதிபதிகள், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்குரைஞர் சூரியபிரகாசத்துக்கு அனுமதி வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com