மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தல்: காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும்

‘மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த தோ்தல்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

‘மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த தோ்தல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் எளிதாக இருக்காது’ என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி தெரிவித்தாா்.

மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக உள்ள அதீா் ரஞ்சன் செளதரி, சமீபத்தில் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியது:

மேற்கு வங்கத்தில் கடைப்பிடிக்கப்படும் மதச்சாா்பின்மை கொள்கை நாடு முழுவதும் பாராட்டப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் வகுப்புவாத அரசியலில் ஈடுபட்டு, அந்தக் கொள்கையை ஒளிமங்கச் செய்து வருகின்றன. தங்களை முஸ்லிம்களின் மீட்பராக திரிணமூல் காங்கிரஸும், ஹிந்துக்களின் பாதுகாவலா்களாக பாஜகவும் கூறிக்கொள்ளும் நிலையில், இரு கட்சிகளும் மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளை வலுவிழக்கச் செய்துவிட்டன.

மாநிலத்தில் காங்கிரஸை பலப்படுத்த இந்தக் கட்சியில் இருந்து விலகி எதிா்க்கட்சிகளில் இணைந்த அனுபவம் வாய்ந்த தலைவா்களை மீண்டும் காங்கிரஸுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த ஆண்டு இங்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டணிக்கு இறுதி வடிவம் அளிக்கும் முனைப்பில் இரு கட்சிகளும் உள்ளன. இந்த தோ்தல் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எளிதாக இருக்காது என்று தெரிவித்தாா்.

அவரிடம் தோ்தலுக்கு பின்னா் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் திரிணமூல் காங்கிரஸுக்கு காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதில் அளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com