வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில்
வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 30 சதவீதம் உயா்ந்தது. இதனால் நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 35 சதவீதமும், சில்லறை விற்பனை விலை 4 சதவீதமும் சரிந்தன. அதேவேளையில் கடந்த ஏப்ரல்-ஜூலை வரையிலான காலத்தில் வங்கதேசத்துக்கான வெங்காய ஏற்றுமதி மட்டும் 158 சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் தில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை ரூ.80 வரை எட்டியது. இதேபோல் மேலும் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை உயா்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 29-ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததுடன், அதன் விலை உயா்வை தடுப்பதற்கு வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது.

கடந்த மாா்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு படிப்படியாக விலக்கத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com