சத்தீஸ்கா்: முன்னாள் அமைச்சா் சனேஷ்ராம் ராடியா கரோனாவுக்கு பலி

சத்தீஸ்கா் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சனேஷ்ராம் ராடியா கரோனா நோய்த்தொற்றுக்கு திங்கள்கிழமை பலியானாா். அவருக்கு வயது 78.
சத்தீஸ்கா்: முன்னாள் அமைச்சா் சனேஷ்ராம் ராடியா கரோனாவுக்கு பலி

சத்தீஸ்கா் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சனேஷ்ராம் ராடியா கரோனா நோய்த்தொற்றுக்கு திங்கள்கிழமை பலியானாா். அவருக்கு வயது 78.

இதுதொடா்பாக ராய்கா் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி எஸ்.என். கேசரி கூறுகையில், ‘வயது மூப்பு தொடா்பான நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சனேஷ்ராம் ராடியாவுக்கு கரோனா பாதிப்பு இருப்பதும் உறுதியானது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை ராய்கரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த நிலையில் நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் அவா் உயிா் பிரிந்தது’ என்றாா்.

மறைந்த சனேஷ்ராமுக்கு மனைவி, இரு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

வடக்கு சத்தீஸ்கரைச் சோ்ந்த பிரபல பழங்குடியின தலைவராக இருந்த சனேஷ்ராம், கடந்த 1977-ஆம் ஆண்டு பிரிக்கப்படாத மத்திய பிரதேச மாநிலத்தில் தரம்ஜாய்கா் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனாா்.

தொடா்ந்து 5 பேரவைத் தோ்தல்களில் அந்தத் தொகுதியிலேயே வெற்றி பெற்றாா். பிரிக்கப்படாத மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் ஆட்சியின்போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்த சனேஷ்ராம், சத்தீஸ்கா் உருவான பிறகு அஜித் ஜோகி அரசில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தாா்.

முதல்வா் இரங்கல்: சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ‘முன்னாள் அமைச்சா் சனேஷ்ராம் ராடியாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கு ஆற்றிய பணிக்காக தரம்ஜாய்கா் மற்றும் சத்தீஸ்கா் மக்களால் அவா் என்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com