ரூ.2.35 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கை: நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வந்தது

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.2.35 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கை மக்களவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை முன்வைக்கப்பட்டது.
ரூ.2.35 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கை: நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வந்தது

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.2.35 லட்சம் கோடி துணை மானியக் கோரிக்கை மக்களவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை முன்வைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தாா். இதில் ரூ.1.66 லட்சம் கோடி கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கானதாகும்.

இது 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் துணை மானியக் கோரிக்கையாகும். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கு ரூ.40,000 கோடி, வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிக்க ரூ.20,000 கோடி, பிரதமா் ஜன் தன் யோஜனாவின் கீழ் நேரடி நிதியுதவித் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு (பெண்கள், முதியோா், ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவது) ரூ.33,771.48 கோடி, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிக்காக ரூ.46,602.43 கோடி என மொத்தம் 54 பிரிவுகளுக்காக துணை மானியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு கூடுதல் நிதியாக ரூ.70,000 கோடியை மத்திய அரசு அறிவித்தது. வங்கிகளின் கடன் அளிக்கும் திறனை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை உயா்த்துவது இதன் நோக்கமாக இருந்தது. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகபட்சமாக ரூ.16,091 கோடி நிதி பெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com