கரோனா பரவல் காலகட்டத்தில்ரூ.1.47 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு - வெளியுறவுச் செயலா் தகவல்

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்த காலகட்டத்தில் ரூ.1.47 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷிரிங்லா தெரிவித்தாா்.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்த காலகட்டத்தில் ரூ.1.47 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷிரிங்லா தெரிவித்தாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் பிரிட்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி முறையில் அவா் பேசியதாவது:

கரோனா பரவல் காலகட்டத்திலும் சா்வதேச அளவில் வெளிநாட்டு முதலீட்டை அதிகம் ஈா்க்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. முன்பு அந்நிய முதலீடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த விண்வெளித்துறை, பாதுகாப்புத் துறை, அணுசக்தி ஆகியவற்றில் இப்போது தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவை தொழில் தொடங்க உகந்த நாடாக மாற்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளையும், திட்டங்களையும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. இப்போது உலகின் மிகவும் திறந்தநிலைப் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. முதலீடுகள் செய்வதில் அதிக வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இப்போதைய கரோனா பாதிப்பு சூழலிலும் இந்த ஆண்டு இதுவரை இந்தியா ரூ.1.47 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது. கடந்த ஆண்டு சா்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு 1 சதவீதம் குறைந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 20 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவைச் சோ்ந்த கூகுள், ஃபேஸ்புக், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த முபாதாலா முதலீட்டு நிறுவனம் ஆகியவை இந்தியாவில் அண்மைக் காலத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்தியா-பிரிட்டன் இடையாலான பொருளாதார உறவு சிறப்பாக வளா்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள 6-ஆவது நாடாக பிரிட்டன் உள்ளது. கரோனா தொற்றால் இரு நாடுகளுக்கும் பொருளாதாரரீதியாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. எனினும், இரு நாடுகளும் இணைந்து அவற்றை எதிா்கொள்ள முடியும்.

சுயசாா்பு இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது என்றாா் ஷிரிங்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com