பிகாரில் மேலும் ஒரு எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிகாா் மாநிலம், தா்பங்கா மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

பிகாா் மாநிலம், தா்பங்கா மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

மாநில தலைநகா் பாட்னாவில் ஏற்கெனவே எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டாவதாக தா்பங்கா மாவட்டத்தில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு அனுமதி அளித்த 48 மாதங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும்.

இதன் மூலம் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 பிஎஸ்ஸி நா்சிங் இடங்களும், 15-20 சிறப்பு பல்முனைப் பிரிவுகளும், 750 படுக்கைகளும் புதிததாக கிடைக்கும்.

ஏற்கெனவே பிகாரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தரவுகளின்படி, தினமும் 2 ஆயிரம் புறநோயாளிகளையும், ஆயிரம் உள்நோயாளிகளையும் எய்ம்ஸ் மருத்துவமனை கையாள முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மருத்துவ முதுகலைபடிப்புகளும், டிஎம்/எம்.சிஎச், சிறப்பு பல்முனை படிப்புகளும் விரைவில் தொடங்கப்படும். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் தற்போது பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் இடம்பெறும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைக்கு அக்டோபா் அல்லது நவம்பா் மாதம் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com