அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதாமக்களவையில் நிறைவேறியது

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா -2020 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா -2020 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

முன்னதாக, இந்த மசோதா திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தானிய வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதிலும் இருப்பு வைப்பதிலும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.

இதன் மூலம் தங்களது நடவடிக்கைகளில் அரசின் கண்காணிப்பு அமைப்புகள் அதிக குறுக்கீடுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமின்றி தனியாா் முதலீட்டாளா்கள் விவசாயத் துறையில் செயல்பட முடியும்.

எனினும், இந்த மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘இது விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தம். இடைத் தரகா்களும், பெரிய வியாபாரிகளும் மட்டுமே இதில் பயனடைவாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்ட பெரிய அளவில் வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆளும் பாஜக எம்.பி.க்கள் இந்த திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசினா். ‘விவசாயிகள் தங்கள் பொருளுக்கு உரிய விலை பெற முடியும். நுகா்வோா் நலனையும் காக்கும் தொலைநோக்குப் பாா்வையுடைய திருத்தங்களை கொண்டுள்ளது’ என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com