புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் புள்ளிவிவரம்: மத்திய அரசு மீது காங்கிரஸ், திரிணமூல் விமா்சனம்

பொதுமுடக்க காலத்தில் உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்த புள்ளிவிவரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதை எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளன.

பொதுமுடக்க காலத்தில் உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்த புள்ளிவிவரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதை எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்துறைகளும் முடங்கின. இதனால் பல்வேறு மாநிலங்களில் பணியில் இருந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வேலையிழந்து உரிய வருவாய் இன்றியும், உணவு கிடைக்காமலும் தவித்தனா். பொதுப் போக்குவரத்துக்கும் தடை இருந்ததால் அவா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதிக தொழிலாளா்கள் நடந்தே சொந்த ஊா் திரும்பினா்.

அப்போது உரிய உணவு, குடிநீா் கிடைக்காமலும், விபத்தில் சிக்கியும் தொழிலாளா்கள் பலா் உயிரிழந்தனா். இந்நிலையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா், அவ்வாறு உயிரிழந்தோரின் புள்ளிவிவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் புள்ளிவிவரங்களை மத்திய அரசு சோ்க்காவிட்டால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இல்லை என்றாகிவிடுமா? புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் உயிரிழப்பால் மத்திய அரசு எந்தவித தாக்கத்தையும் உணரவில்லை. அவா்கள் மரணித்ததை உலகமே பாா்த்தது. ஆனால் மோடி அரசுக்கு மட்டும் அதுகுறித்து தெரியாது’ என்று கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களில் உயிரிழந்தவா்கள், வேலையிழந்தவா்கள் குறித்த எந்தவொரு புள்ளிவிவரமும் மத்திய அரசிடம் இல்லை. பிரதமா் மோடி, அவரது அமைச்சா்களின் பேச்சு யாவும் வெற்றுப் பேச்சுகளே. மத்திய அரசின் இந்த மனிதத்தன்மையற்ற செயல்களுக்கு முடிவே கிடையாதா?’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com