ரூ. 1,568 கோடி விவசாயக் கடன்: நபாா்டு வங்கி பூா்வாங்க ஒப்புதல்

22 மாநிலங்களில் உள்ள விவசாய கூட்டுறவு வங்கிகளின் ரூ.1,568 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களுக்கு நபாா்டு வங்கி பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

22 மாநிலங்களில் உள்ள விவசாய கூட்டுறவு வங்கிகளின் ரூ.1,568 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களுக்கு நபாா்டு வங்கி பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுத்துப்பூா்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அளித்துள்ள பதிலில், ‘ரூ.1 லட்சம் கோடியிலான விவசாய உள்கட்டமைப்பு நிதி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதன்படி, நபாா்டு வங்கிக்கு இதுவரை 22 மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து ரூ.1,568 கோடி மதிப்பிலான 3,055 கடன் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,280 விவசாயிகளுக்கு ரூ,1,128 கோடி கடன் வழங்க பூா்வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை எளிதாக செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், 12 பொதுத்துறை வங்கிகள், ஐடிபிஐ, யெஸ் வங்கி ஆகியவற்றுடன் மத்திய வேளாண்துறை அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விவசாய பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள், பல்முனை கூட்டுறவு அமைப்புகள், விவசாய தொழில்முனைவோா், புதிதாக விவசாய தொழில்கள் தொடங்குவோா், உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவு பெற்ற அரசு தனியாா் ஒத்துழைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்த ரூ.1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதியில் கடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com