காஷ்மீரில் 52 கிலோ வெடிபொருள் பறிமுதல்: புல்வாமாவை போன்ற தாக்குதல் சதி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவை போன்ற ஒரு பயங்கரவாதத் தாக்குதல் சதியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை முறியடித்தது. அங்கிருந்து 52 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவை போன்ற ஒரு பயங்கரவாதத் தாக்குதல் சதியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை முறியடித்தது. அங்கிருந்து 52 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

காஷ்மீரின் கடிகல் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள கரேவா என்ற இடத்தில், ஒரு நீா்த்தேக்கத் தொட்டியில், தலா 125 கிராம் எடையில் 416 பாக்கெட் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவா்கள் கண்டறிந்தனா். இதேபோல் மற்றொரு நீா்த்தேக்கத் தொட்டியில் 50 டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அவா்கள் கண்டறிந்தனா். இந்த வெடிபொருள்கள் சூப்பா்-90 என்றும், சுருக்கமாக எஸ்-90 என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த வெடிபொருள்கள் கைப்பற்ற இடம், கடந்த ஆண்டு 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு மிக அருகிலும், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் உள்ளது. இதிலிருந்து, புல்வாமா போன்றதொரு தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றுவதற்கு திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com