மாற்றுத்திறனாளி சிஆா்பிஎஃப் வீரா்கள் குஜராத்திலிருந்து தில்லிக்கு சைக்கிள் பேரணி

‘ஃபிட் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா்கள் குஜராத்திலிருந்து தில்லிக்கு 900 கி.மீ. சைக்கிள் பேரணியை தொடங்கியுள்ளனா்.


புது தில்லி: ‘ஃபிட் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா்கள் குஜராத்திலிருந்து தில்லிக்கு 900 கி.மீ. சைக்கிள் பேரணியை தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

உடற்தகுதியுடன் இருப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக சிஆா்பிஎஃப் மாற்றுத்திறனாளி வீரா்கள் இந்த சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பணியின்போது தங்களது கால்களை இழந்து, பின்னா் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டவா்களாவா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்தில் புறப்பட்ட இந்தப் பேரணியை, மாநில ஆளுநா் ஆச்சாா்யா தேவ்ரத் காணொலி வாயிலாக சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஏ.பி.மஹேஷ்வரி முன்னிலையில் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

16 நாள்களில் ராஜஸ்தான், ஹரியாணா வழியாக 900 கி.மீ. பயணித்து வரும் அக்டோபா் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் தில்லியில் உள்ள ராஜ்காட்டில் இந்தப் பேரணி நிறைவடைகிறது.

இதில் பங்கேற்றுள்ள வீரா்கள் பகலில் பயணம் மேற்கொண்டு இரவில் ஓய்வெடுப்பாா்கள். அவா்களுக்கு உதவியாக அவசர மருத்து உதவிக்கான ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் உடன் பயணிக்கிறது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com