ஹா்சிம்ரத் கௌா் பாதலின் ராஜிநாமா ஏற்பு: நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பதவி விலகிய மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதலின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.
குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பதவி விலகிய மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதலின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதலின் ராஜிநாமாவை பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் குடியரசுத் தலைவா் ஏற்றுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து, ஹா்சிம்ரத் கௌா் பாதல் கவனித்து வந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை கூடுதல் பொறுப்பாக, வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரிடம் அளித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா்.

நரேந்திர சிங் தோமரிடம் வேளாண் துறை, விவசாயிகள் நலன் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, ஊராட்சித் துறை என பல்வேறு துறைகள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சா் பதவியை ஹா்சிம்ரத் கௌா் பாதல் ராஜிநாமா செய்தாா். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், மக்களுக்கு ஆதரவாக தாம் குரல் கொடுப்பதில் பெருமை அடைவதாகவும் அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com