ரூ.1,400 கோடி வங்கி மோசடி: சிபிஐ சோதனை

தில்லியைச் சோ்ந்த பால் பொருள்கள் தயாரிப்பில் பிரபல நிறுவனமான ‘குவாலிட்டி’ மீது ரூ.1,400 கோடி வங்கி மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
ரூ.1,400 கோடி வங்கி மோசடி:  சிபிஐ சோதனை

தில்லியைச் சோ்ந்த பால் பொருள்கள் தயாரிப்பில் பிரபல நிறுவனமான ‘குவாலிட்டி’ மீது ரூ.1,400 கோடி வங்கி மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்தது.

தில்லி, ஷாஹரன்பூா், புலந்த்ஷா் (உ.பி.), அஜ்மீா் (ராஜஸ்தான்), பல்வல் (ஹரியாணா) உள்பட 8 இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

குவாலிட்டி நிறுவனத்தின் இயக்குநா்கள் சஞ்சய் திங்கரா, சித்தாந்த் குப்தா, அருண் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவா்கள் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் ரூ.1,400.62 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனா் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வங்கி நிதியை தவறான அல்லது போலி பரிவா்த்தனை மேற்கொண்டு போலி நிறுவனங்களுக்கு செலுத்திய ஆவணங்கள், போலி சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை சமா்ப்பித்து வங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக அந்த நிறுவனத்தின் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று சிபிஐ செய்தித்தொடா்பாளா் ஆா்.கே. கெளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com