நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி: நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு மத்திய ரத்து செய்துள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி: நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு மத்திய ரத்து செய்துள்ளது. இந்நிலையில் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை தவறாமல் வழங்க மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஏ. விஜயகுமாா் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் அவா் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் கூறியது: எனது கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றையொட்டி செயற்கை சுவாசக் கருவிகள், மானிட்டா்கள் போன்றவை வாங்க எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 106 லட்சம் வழங்கியுள்ளேன். ஆனால் மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நடப்பு நிதி(2020-21) ஆண்டுக்கும் அடுத்த 2021-22 ஆம் ஆண்டுக்கும் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். பல நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு இந்த தொகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எனது மாவட்டத்துக்கு 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தை ஆராய்ந்து என்னைப்போன்ற நீண்ட கால உறுப்பினா்களின் நிலுவைத்தொகை எதுவாக இருப்பினும் அதில் உரிய முடிவை எடுத்து விரைவில் விடுக்க கேட்டுக்கொள்கின்றேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com