நாட்டில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 62 லட்சத்தை கடந்தது

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு 62 லட்சத்தை கடந்தது
நாட்டில் கரோனா பாதிப்பு 62 லட்சத்தை கடந்தது

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 62,25,764-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 9,40,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கரோனா தொற்றிலிருந்து 51,87,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,179 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  97,497-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகிறது. மகாராஷ்டிரத்தில் 2,60,789 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 36,181 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், 10,69,159 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 1,07,756 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,76,378 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 8,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆந்திரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 59,435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு  5,780 பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நாட்டில் இதுவரை  7,41,96,729 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com