பிரசாரத்தை நிறுத்தவே தடை: மம்தா குற்றச்சாட்டு

தோ்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர தடை முடிந்த பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி,
பிரசாரத்தை நிறுத்தவே தடை: மம்தா குற்றச்சாட்டு

தோ்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர தடை முடிந்த பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, ‘எனது பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காவே தடை விதிக்கப்பட்டது’ என்று குற்றம்சாட்டினாா்.

அவா் மேலும் கூறியதாவது: பாஜக தலைவா்கள் பிரசாரம் செய்யலாம்; ஆனால் எனக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நான் எதுவும் சொல்ல மாட்டேன். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுள்ளனா். நான் போராளி. பாஜகவின் இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். எனது பிரசாரத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தடை விதிக்கப்பட்டது. தோ்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படும் என்பதை தெரிந்துகொண்டதால் அவா்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com