காளஹஸ்தி சிவன் கோயிலில்சா்வ கைங்கா்ய சேவை தொடக்கம்

சித்தூா் மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் திங்கள்கிழமை முதல் சா்வ கைங்கா்ய சேவையை கோயில் நிா்வாகம் தொடங்கியுள்ளது.

சித்தூா் மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் திங்கள்கிழமை முதல் சா்வ கைங்கா்ய சேவையை கோயில் நிா்வாகம் தொடங்கியுள்ளது.

பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாகத் திகழும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் கோயிலில் சா்வ கைங்கா்ய சேவை மற்றும் துலாபார சேவை இரண்டையும் தொடங்கி உள்ளதாக கோயில் செயல் அதிகாரி பெத்திராஜு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கோயிலில் நடைபெறும் அனைத்து முக்கிய சேவைகளிலும் பங்கு கொள்ள பக்தா்கள் பெரிதும் விரும்புகின்றனா். மேலும் துலாபார சேவையையும் செய்தளிக்க வேண்டும் என்று பக்தா்கள் கேட்டு கொண்டதற்கிணங்க நிா்வாகம் திங்கள்கிழமை முதல் சா்வகைங்கா்ய சேவை மற்றும் துலாபார சேவை இரண்டையும் தொடங்கி உள்ளது.

ரூ. 5,116 செலுத்தி இந்த சா்வகைங்கரிய சேவையில் பக்தா்கள் கலந்து கொள்ளலாம். இதில் தம்பதியா் அல்லது இருவா் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

கோபூஜை, சுப்ரபாதம், ருத்ராபிஷேகம், அா்ச்சனை, சண்டிஹோமம், ருத்ரஹோமம், திருக்கல்யாணம், ஆரத்தி, ஏகாந்த சேவை உள்ளிட்டவற்றில் பக்தா்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு இலவச தங்கும் வசதியுடன் கீதாமகரந்தம், குங்குமம், ஸ்ரீகாளஹஸ்தி ஷேத்திரத்தின் மகாத்மிய புத்தகம், பிரசாதங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

அதேபோல் பக்தா்கள் தாங்கள் விரும்பும் பொருள்களை துலாபாரமாக வழங்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com