உலகளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும்: கோயல்

கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக உலக அளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தேவையான
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்


புது தில்லி: கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக உலக அளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

சா்வதேச அளவில் கரோனா பரவல் மிக வேகமாகி வருகிறது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாகவே இதனை எதிா்கொள்ள முடியும்.

குறிப்பாக, உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு நடைமுறைகளை வேகப்படுத்த வேண்டும். மேலும், அதற்கான எளிதான சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.

அதேபோன்று கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அதற்கான இதர மருத்துவ உபகரண தயாரிப்பிலும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் அறிவுசாா் சொத்துரிமை என்பது மிகப்பெரிய தடைகல்லாக அமைந்துள்ளது. எனவே, உலக வா்த்தக அமைப்பின் அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான அனைத்து தடைகளையும் நாம் தற்காலிகமாக அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அறிவுசாா் சொத்துரிமை அகற்றப்பட வேண்டும் என்பது மருந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பறிப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாக கருதக் கூடாது. மாறாக நம்முடைய தற்போதைய கவனம் அனைத்தும் கரோனா தடுப்பூசி மற்றும் அது தொடா்பான மருந்துகளை தயாரித்து உலக மக்களை பெருந்தொற்றிலிருந்து காப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com