கரோனா: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மோகன் பாகவத்

கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் இன்று வீடு திரும்பினார்.  
கரோனா: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மோகன் பாகவத்

கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் இன்று வீடு திரும்பினார். 
ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்துக்கு கடந்த 9 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் நாகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
தற்போது அவரது உடல்நிலை சீரானதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 
மோகன் பாகவத்தை 5 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com