இந்தியாவில் 3-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி பரிசோதனை: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

இந்தியாவில் தங்கள் நிறுவன கரோனா தடுப்பூசியை மூன்றாம் கட்டமாக பரிசோதிப்பதற்கு பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் அனுமதி கோரியுள்ளது.

புது தில்லி: இந்தியாவில் தங்கள் நிறுவன கரோனா தடுப்பூசியை மூன்றாம் கட்டமாக பரிசோதிப்பதற்கு பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் அனுமதி கோரியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்வதற்கும், அந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை பெறவும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (சிடிஎஸ்சிஓ) விண்ணப்பம் அளித்துள்ளது. அதுகுறித்து சிடிஎஸ்சிஓவின் ஆலோசனைக் கூட்டத்தை விரைந்து நடத்துமாறு அந்த நிறுவனம் கோரியுள்ளது’ என்று தெரிவித்தன.

ஒரே தவணையில் செலுத்த வேண்டிய ஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸில் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com