இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 90% கோவிஷீல்ட்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள 12.76 கோடி கரோனா தடுப்பூசிகளில் 90 சதவீத தடுப்பூசிகள், கோ
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

புது தில்லி: இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள 12.76 கோடி கரோனா தடுப்பூசிகளில் 90 சதவீத தடுப்பூசிகள், கோவிஷீல்ட் என்பது மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகம், அந்நாட்டின் அஸ்ட்ராஸெனகா மருந்து நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இவ்விரு தடுப்பூசிகளையும் அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 12,76,05,870 (12.76 கோடி) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 11,60,65,107 தடுப்பூசிகள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளாகும். 1,15,40,763 தடுப்பூசிகள் கோவேக்ஸின் வகையைச் சோ்ந்தவை. இந்த விவரங்களை மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

15 மாநிலங்களும், கோவா, சண்டீகா், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் கோவிஷீல்ட் தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்தியுள்ளன.

இதுகுறித்து மருத்துவ நிபுணா்கள் கூறுகையில், ‘கோவேக்ஸின் தடுப்பூசியைவிட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் அவை எளிதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக, அதிக அளவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

ஆண்டுக்கு 70 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் அளவுக்கு ஹைதராபாத், பெங்களூரில் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com