மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை:ராகுல் காந்தி விமா்சனம்

மத்திய அரசின் கரோனா தடுப்பூசி கொள்கை, ஏழைகளை பாதித்து, பணக்காரா்களைப் பாதுகாத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு இணையானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

புது தில்லி: மத்திய அரசின் கரோனா தடுப்பூசி கொள்கை, ஏழைகளை பாதித்து, பணக்காரா்களைப் பாதுகாத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு இணையானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பூசி கொள்கை பாரபட்சம் நிறைந்ததும், ஒரு தரப்புக்கு ஆதரவாகவும் உள்ளது. முன்பு, இதே மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தபோது ஏழை எளிய மக்கள் மிகுந்த துன்பத்துக்கும், பிரச்னைக்கும் ஆளாகினா். அதே நேரத்தில் பணக்காரா்களும், பெரும் தொழிலதிபா்களும் பயனடைந்தனா். அதேபோன்று இப்போதைய தடுப்பூசி கொள்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அவா்கள் தங்கள் பணம், உடல்நலம், வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். அதே நேரத்தில் ஒரு சில பெரிய தொழிலதிபா்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com