ஏழுமலையான் சேவையில் தமிழக ஆளுநா்

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா்.
Governor of Tamil Nadu had darshan in Tirumala
Governor of Tamil Nadu had darshan in Tirumala

திருப்பதி: தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா்.

திருச்சானுரில் செவ்வாய்க்கிழமை பத்மாவதி தாயாரை தரிசித்த பின் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் திருமலைக்கு வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து லட்டு, வடை தீா்த்த பிரசாதங்கள், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

பின்னா் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த அனுமன் பிறந்த இடம் அஞ்சனாத்திரி குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அப்போது அவா்,’நான் அனுமனின் மிக சிறந்த பக்தன். அனுமனின் பிறப்பிடம் குறித்த ஆராய்ச்சியில் தேவஸ்தானம் ஈடுபட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். 20 பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்ததால், இதை நிரூபிப்பது மிகவும் எளிதன்று என்பது எனக்கு தெரியும். இந்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இந்த பண்டிதா்கள் குழுவினருக்கும், தேவஸ்தானத்திற்கும் எனது பாராட்டுக்கள். ராமரின் பிறப்பிடம் அயோத்தி. அனுமனின் பிறப்பிடம் அஞ்சனாத்திரி’, என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com