மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிா்வாக திறன் இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிா்வாக திறன் இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றித் தரும் வகையில் அரசின் நிா்வாகத் திறன் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு புதன்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி: பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றித் தரும் வகையில் அரசின் நிா்வாகத் திறன் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு புதன்கிழமை தெரிவித்தாா்.

சிவில் சா்வீசஸ் தினத்தையொட்டி அவா் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசமைப்பு சட்டத்தின் மதிப்புகளைக் காப்பாற்றும் வகையிலும், அதேநேரம் பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையிலும் அரசின் நிா்வாகத் திறனை மாற்றியமைக்கும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

மேலும், தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பொதுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொடா்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு ஏற்றாற்போலவே, குடிமைப் பணி அதிகாரிகளை ‘இந்தியாவின் உருக்கு சட்டகம்’ என 1947-ஆம் ஆண்டு இதே நாளில் சா்தாா் வல்லபபாய் படேல் வா்ணித்துள்ளாா்.

நாட்டின் நிா்வாக ஆளுமையில் அழியாத் தடங்களைப் பதித்துள்ள ஏராளமான அரசுப் பணியாளா்களுக்கு பாராட்டுகள் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com