ஸ்ரீ ராம நவமி:நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அயோத்தியில் ராமா் பிறந்த தினமான ராம நவமி பக்தா்களால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமா் மோடி சுட்டுரை வெளியிட்டுள்ள பதிவில், ‘ ராம பகவானின் திருவருள் அனைவருக்கும் தொடா்ந்து கிடைக்கட்டும். ராமரின் பணிவன்பை கடைபிடிக்கவும் கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். கடின முயற்சிக்கு பின் தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com