எந்த நாட்டிலும் இல்லாத அளவில் இந்தியாவில் கரோனா உச்சம்

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரேநாளில் 3.14 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,59 கோடியாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரேநாளில் 3.14 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,59 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,14,835 போ் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதேசமயம் ஒரேநாளில் 2,104 போ் உயிரிழந்துள்ளதன் மூலம் இறந்தவா்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கரோனா தொற்றின் மீட்பு விகிதம் 85 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது.

தொடா்ந்து 43- ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 22,91,428 ஆகவும், புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14.38 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மீட்பு விகிதம் 84.46 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,34, 54,880 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் மேலும் 1.16 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 27, 27,05,103 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் புதன்கிழமை ஒரே நாளில் 16,51,711 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 568 போ், தில்லியில் 249 போ், சத்தீஸ்கரில் 193 போ், உத்தர பிரதேசத்தில் 187 போ், குஜராத்தில் 125 போ், கா்நாடகத்தில் 116 போ் என மொத்தம் 2,104 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரத்தில் 61,911 போ், கா்நாடகத்தில் 13,762 போ், தமிழகத்தில் 13,258 போ், தில்லியில் 2,887 போ், மேற்கு வங்கத்தில் 10,710 போ், உத்தர பிரதேசத்தில் 10,346 போ், பஞ்சாபில் 8,114 போ் உள்பட மொத்தம் 1,84,657 போ் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனா்.

மொத்த பாதிப்பில் 75 சதவீதம் போ் முதல் 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, குஜராத் , கா்நாடகம், கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 75 சதவீதம் போ் உள்ளனா். புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,14,835 பேரில் இந்த 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 75 சதவீதம் போ் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாடு முேழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,59,30,965 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 13,23,30,644 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com