நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை: என்.வி. ரமணா வருத்தம்

நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விமரிசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, விவாதம் முறையாக நடைபெறுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விமரிசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, விவாதம் முறையாக நடைபெறுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமின்றி சட்டம் இயற்றும் விதத்தை விமரிசித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, விவாதம் முறையாக நடைபெறுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் பேசிய ரமணா, முந்தைய காலத்தில் இரண்டு அவைகளிலும் வழக்கறிஞர்கள் அதிக இருந்ததாகவும், மக்கள் சேவை ஆற்ற வழக்கறிஞர் சமூகம் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய இல்லை மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நாடாளுமன்றங்களில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை. சட்டங்கள் குறித்த தெளிவு இல்லை. சட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து கூட நமக்கு தெரிவதில்லை. வழக்கறிஞர்களும் அறிவுஜீவிகளும் அவைகளில் இல்லை என்றால் மக்களுக்குதான் இழப்பு.

நமது சுதந்திர போராட்ட தலைவர்களில் பெரும்பான்மையானோர் வழக்கறிஞர்களாகவும் இருந்துள்ளனர். முதல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வழக்கறிஞர்களாக நிறைந்திருந்தனர். துரதிருஷ்டவசமாக தற்போது அவைகளிலும் நடைபெறும் விவாதங்கள் யாவும் ஆக்கப்பூர்வமாக இருப்பதில்லை. 

நிதி மசோதா போன்றவற்றை தாக்கல் செய்யும்போது நடைபெறும் விவாதங்களை பார்த்திருக்கிறேன். ஆக்கப்பூர்வமான கருத்துகள் முன்வைக்கப்படும். சட்டங்கள் யாவும் ஆழ்ந்து ஆராய்ந்து விவாதிக்கப்படும். மசோதாக்களின் சட்ட நுணுக்கங்களை அனைவரும் அறிந்திருப்பர். எனவே, மக்கள் சேவையாற்ற வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com