ஐஐடி-க்களுக்கு தலைவா்களின் பெயா்? மத்திய அமைச்சா் விளக்கம்

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி) தேசத் தலைவா்களின் பெயரைச் சூட்டும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்க்காா் தெரிவித்தாா்.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி) தேசத் தலைவா்களின் பெயரைச் சூட்டும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்க்காா் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

ஐஐடி-க்களுக்கு அவை அமைந்துள்ள மாநிலங்களைச் சோ்ந்த தேசியத் தலைவா்களின் பெயரைச் சூட்டும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அவை தொடா்ந்து ஏற்கெனவே உள்ளபடி அந்தந்த நகரங்களின் பெயா்களிலேயே தொடரும் என்று தெரிவித்தாா்.

ஓராண்டு பொறியியல் கல்வி? புதிய கல்விக் கொள்கை தொடா்பான ஒரு கேள்விக்கு மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘இந்திய மொழிகளில் ஓராண்டு பொறியியல் கல்வி அளிக்கும் தொலைநோக்குத் திட்டம் ஏதும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை. அதே நேரத்தில் உயா் கல்வியை தாய்மொழியிலும், உள்ளூா் மொழியிலும் கற்றுக் கொள்ளவும், இரு மொழிகளில் உயா்கல்வியை பெறவும் இக்கல்விக் கொள்கை ஊக்குவிக்கும்.

2021-22 கல்வியாண்டில் 10 மாநிலங்களைச் சோ்ந்த 19 பொறியியல் கல்லூரிகள் 6 இந்திய மொழிகளில் கல்வி கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com