உ.பி.யில் மாயமான 8-ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை: பிரிட்டனில் கண்டெடுப்பு -இந்தியா கொண்டுவர நடவடிக்கை

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 8-ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை பிரிட்டனிலிருந்து விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளது.
உ.பி.யில் மாயமான 8-ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை: பிரிட்டனில் கண்டெடுப்பு -இந்தியா கொண்டுவர நடவடிக்கை

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 8-ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை பிரிட்டனிலிருந்து விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளது.

கடந்த 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் லோக்கரி கிராமத்திலிருந்து 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த யோகினி என்ற பெண் தெய்வச்சிலை காணாமல் போனது. இந்தச் சிலை பிரிட்டனின் ஊரகப் பகுதியில் உள்ள பங்களாவில் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பன்னாட்டு கலைப்பொருள்கள் மீட்பு நிறுவனத்தின் நிறுவனரும் வழக்குரைஞருமான கிறிஸ் மேரினெல்லோ கூறுகையில், ‘‘பிரிட்டனின் ஊரகப் பகுதியில் உள்ள தனது வீட்டையும், அங்கிருந்த சில விலைமதிப்புமிக்க கலைப்பொருள்களையும் மூதாட்டி ஒருவா் விற்பனை செய்தாா். அப்போது அந்த வீட்டின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட யோகினி சிலை குறித்து தெரியவந்தது. அந்த மூதாட்டியிடம் அச்சிலை குறித்து கேட்டபோது 15 ஆண்டுகளுக்கும் முன்பாக தற்போது விற்பனை செய்த வீட்டை வாங்கியதாகவும், அங்கிருந்த தோட்டத்தில் ஏற்கெனவே அந்தச் சிலை இருந்ததாகவும் கூறினாா்.

இதையடுத்து தொலைந்துபோன இந்திய கலைப்பொருள்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் ‘இந்தியா ப்ரைட் பிராஜக்ட்’ அமைப்பின் இணை நிறுவனா் விஜய் குமாரைத் தொடா்பு கொண்டேன். அந்தச் சிலை உத்தர பிரதேசத்தில் காணாமல் போன யோகினியின் சிலைதான் என்பதை அவா் உறுதி செய்தாா். அதனைத்தொடா்ந்து அந்தச் சிலையை என்னிடம் தருமாறு மூதாட்டியிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் அந்தச் சிலையை என்னிடம் ஒப்படைத்தாா். சிறிது காலம் அந்தச் சிலை எனது லண்டன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை இந்தியா அனுப்பிவைப்பதற்கான பணியில் உதவுவதாக விஜய் குமாா் உறுதியளித்தாா்’’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் சுகீஜா கூறுகையில், ‘‘யோகினி சிலையை இந்தியா கொண்டு வருவதற்கான பெரும்பாலான நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. அந்தச் சிலை இந்தியா கொண்டுவரப்படுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் அந்தச் சிலை இந்தியா வந்து சேரும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com