கோப்புப்படம்
கோப்புப்படம்

மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

நாட்டில் தொடா்ந்து ஐந்து நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 17 நாள்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

புது தில்லி: நாட்டில் தொடா்ந்து ஐந்து நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 17 நாள்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் இதுவரை 21.15 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா்களில் 5.20 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 6.20 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 14,199 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாடு தற்போது சிகிச்சைப் பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 1,56,385-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,05,850-ஆக உள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

கடந்த மூன்று நாள்களாக மகாராஷ்டிரத்தில் ஆறு ஆயிரத்தைத் தாண்டி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது. திங்கள்கிழமை இந்த எண்ணிக்கை 5,210-ஆக பதிவாகியது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 83 போ் உயிரிழந்தனா். 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த உயிரிழப்பு 1,56,385-ஆக உள்ளது.

24 மணி நேரத்தில் 9,695 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 1,06,99,410 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தடுப்பூசி: திங்கள்கிழமை வரை நாட்டில் 1,11,16,854 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவற்றில் கா்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மட்டும் 60.17 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com