குடியரசு தின வன்முறை தொடர்பாக 19 பேர் கைது

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும்



புது தில்லி: கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் காவல் துறையினர் தாக்கப்பட்டனர். செங்கோட்டை பகுதியில் சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து பலரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தில்லியைச் சேர்ந்த தனஞ்சய் ஜெயின் என்பவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், போராட்டம் என்ற பெயரில் சாலைகளையும், பொது இடங்களையும் ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றவும், விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்துவோரை அகற்ற வேண்டும்.

செங்கோட்டை வன்முறை தொடர்புடைய விவகாரத்தில் கடைமையாற்றத் தவறிய அனைத்து காவல் அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தில்லி காவல் ஆணையரை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா, வழக்குரைஞர் அஜய் திக்பால் ஆகியோர் ஆஜராகி, செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 50 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும்,செங்கோட்டை பகுதியில் போதிய படைவீரர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, விசாரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com