மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி இருசக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய ஆட்சி வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி திரிணமூல், பாஜக போன்ற அரசியல் தலைவர்கள் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று மேற்கு வங்க மாநிலம் பஞ்ச்போட்டாவில் பாஜக சார்பில் வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி பேரணியில் ஈடுபட்டார். இதில் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பேரணியாக வாகனத்தை இயக்கிச் சென்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெட்ரோல், டீசல் விலையர்வைக் கண்டித்து நேற்று (பிப்.25) இருசக்கர வாகனத்தில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!
எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவிடம் உதவி கேட்கும் அண்டைநாடுகள்!

”ரஜினிக்கு மிரட்டல் விடுத்த திமுக!” ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

