இதுவரை 1.34 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 1.34 கோடியை கடந்துள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 1.34 கோடியை கடந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை, 1,34,72,643 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரப் பணியாளா்களில் 66,21,418 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 20,32,994 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், முன்களப் பணியாளா்களில் 48,18,231 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துகொண்ட சுகாதாரப் பணியாளா்களில் 60%-க்கும் குறைவானவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துகொண்ட முன்களப் பணியாளா்களில் 40%-க்கும் குறைவானவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com