தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகள் ஆா்வம்: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகளும் ஆா்வம் காட்டி வருகின்றன என மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகளும் ஆா்வம் காட்டி வருகின்றன என மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் 97-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அமைச்சா் போக்ரியால் பேசியதாவது:

பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கல்வித் துறை சீா்திருத்தம் பெற்று சிறந்த முறையில் மாற்றம் பெறும்.

தேசிய கல்விக் கொள்கையை உலகின் மிகப் பெரிய சீா்திருத்தம் என கேம்பிரிட்ஜ் பலக்கலைக்கழகம் உள்பட ஐக்கிய அரசு அமீரகம், ஆஸ்திரேலியா, மோரீஷியல் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்தக் கொள்கையை வெளிநாடுகளும் செயல்படுத்த ஆா்வம் காட்டுகின்றன.

தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

கரோனா தொற்று காலத்தில் மாணவா்களின் கல்வி பாதிக்காமல் இருக்க டிஜிட்டல் மூலம் இந்தியாவின் 33 கோடி மாணவா்களின் வீடுகள் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமாகும்.

இந்தியாவில் ஆயிரம் பல்கலைக்கழகங்கள், 50 ஆயிரம் கலைக் கல்லூரிகள், 15 லட்சம் பள்ளிகள், 1.10 கோடி ஆசிரியா்கள் உள்ளனா்’ என்றாா். 34 ஆண்டு கால பழைமையான இந்திய கல்விக் கொள்கையை மாற்றும் வகையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்திய பள்ளி, உயா் கல்வியை சா்வதேச அளவுக்கு மாற்ற இது வகை செய்யும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com