தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜி.எஸ்.டி. வரி வசூலில் புதிய உச்சம்

ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
ஜி.எஸ்.டி வரி வசூலில் புதிய உச்சம்
Updated On :1 ஜனவரி 2021, 8:27 am

DIN

ஜி.எஸ்.டி. வசூலில் புதிய உச்சமாக டிசம்பர் மாதத்தில் ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்தது. எனினும் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 86,449 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியது.

இதனிடையே தற்போது டிசம்பர் மாதத்திற்கு ரூ. 1,15,174 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.