இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி: நேபாளம் அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை நேபாளத்தில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அந் நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை நேபாளத்தில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அந் நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான முடிவை நேபாள அரசு வெள்ளிக்கிழமை எடுத்ததாக அந் நாட்டு மருந்து நிா்வாகத் துறை (டிடிஏ) அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்தது. அதுபோல, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியை அஸ்ட்ராஸெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.

இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகாலத்தில் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் மூலம், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள வீரா்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை (ஜன.16) தொடங்கப்பட உள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் சாா்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேபாள அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந் நாட்டு மருந்து நிா்வாகத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டில் அடிப்படையில் பயன்படுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியைத் தொடா்ந்து, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற பதிவு செய்யுமாறு நேபாள மருந்து நிா்வாகத் துறை வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அங்குள்ள மூன்று நிறுவனங்கள் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்திருப்பதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் இதுவரை 2,66,816 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 1,950 போ் உயிரிழந்துள்ளனா். அங்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 270 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com