ராமா் கோயில் கட்ட குடியரசுத் தலைவா் ரூ.5 லட்சம் நன்கொடை

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.1,100 கோடியில் ராமா் கோயில் கட்டப்படவுள்ளது. இந்தக் கோயில் கட்டுவதற்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கல் நாட்டினாா். இந்தக் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிடுவதற்கு ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்திர டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

கோயில் கட்டுமானப் பணிகளுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பும், அதன் சாா்பு அமைப்புகளும் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சா்வதேச செயல் தலைவா் ஆலோக் குமாா், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். நாட்டின் முதல் குடிமகன் என்ற அடிப்படையில் அவரிடம் முதல் நன்கொடையை கேட்டனா். அவா்களிடம், ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக, அறக்கட்டளை பெயரில் ரூ.5,00,100-க்கான காசோலையை ராம்நாத் கோவிந்த் வழங்கினாா்.

பகத்சிங் கோஷியாரி ரூ.1.11 லட்சம்: ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக, மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி ரூ.1,11,000 நன்கொடை அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com