1,000 பேருந்துகள் வாங்க தில்லி அரசு உத்தரவு

தில்லியில் மேலும் 1,000 தாழ்தளம், குளிா்சாதனப் பேருந்துகள் வாங்க தில்லி அரசின் போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1,000 பேருந்துகள் வாங்க தில்லி அரசு உத்தரவு

தில்லியில் மேலும் 1,000 தாழ்தளம், குளிா்சாதனப் பேருந்துகள் வாங்க தில்லி அரசின் போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘கடந்த 12 ஆண்டு கால காத்தலுக்கு பிறகு டிடிசி 1,000 தாழ்தள, ஏசி சிஎன்ஜி பேருந்துகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. செப்டம்பா் மாதத்துக்குள் இந்தப் பேருந்துகள் தில்லி சாலைகளில் இயங்கும். சா்வதேச பொதுப் போக்குவரத்தை உருவாக்கி மாசற்ற தில்லியாக மாற்ற பிரதேச அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த புதிய 1,000 பேருந்துகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,693-ஆக உயா்ந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அதிகமான எண்ணிக்கையாகும். பல்வேறு தடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டுகளில் தில்லி அரசு பேருந்துகளைக் கொள்முதல் செய்து செயலாக்கமும் செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் இந்த உத்தரவின் மூலம் டிடிசி நிறுவனம் மூடப்படும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ேறு தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்தாக தில்லியை மாற்ற வேண்டும் என்ற முதல்வா் கேஜரிவாலின் கனவை நினைவாக்க போக்குவரத்துத் துறை உழைத்து வருகிறது. தில்லியின் பொதுப் போக்குவரத்துக்கு டிடிசி முதுகெலும்பாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

தற்போது தில்லியில் மொத்தம் 6,693 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில், 3,760 பேருந்துகள் டிடிசியும், 2,933 பேருந்துகள் கிளஸ்டா் பேருந்துகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com