கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்பாதீர்கள்: கேஜரிவால்

கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

கரோனா தடுப்பூசி தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி முழு பாதிகாப்பானது என்று வல்லுநர்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

கரோனா தடுப்பு மருந்து குறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''உலகில் மிகப்பெரிய கரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா தடுப்பு மருந்து குறித்த வந்தந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் 81 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவரளுடன் உரையாடினேன். அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைவார்கள்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com