கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டாா் அதாா் பூனாவாலா

புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா சனிக்கிழமை போட்டுக் கொண்டாா்.
கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்ட சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா.
கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்ட சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா.

புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா சனிக்கிழமை போட்டுக் கொண்டாா்.

கரோனா தொற்றுக்கு எதிராக, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியும், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்ஸின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகின்றன.

கரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, சீரம் நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலா, கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக, சுட்டுரைப் பக்கத்தில் சிறு விடியோவையும் அவா் பதிவேற்றம் செய்துள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் மாபெரும் வெற்றிபெற இந்தியாவுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனாவை தடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் கோவிஷீல்ட் தடுப்பூசியும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. இந்த தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுடன் இணைந்து நானும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளாா்.

கோவிஷீல்ட் தடுப்பூசியை பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com