புரட்சிகரமான நடவடிக்கை: உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினாா்.
புரட்சிகரமான நடவடிக்கை: உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்று மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா குா்லா வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு எந்தவித தீா்வும் இல்லாத கால கட்டத்தில், அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தன்னலமின்றி மருத்துவப் பணியாளா்கள் சிகிச்சை அளித்தனா். அந்த நாள்களை நினைத்தால் இன்றும் நடுக்கம் வருகிறது.அது மிகவும் கடுமையான சூழல்.

ஆனால், இன்றைக்கு மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களின் தீவிர முயற்சிகளின் காரணமாக, கரோனா மையத்தில் சிகிச்சைபெற ஒரு நோயாளிகூட இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுபோல, சிகிச்சை பெற நோயாளிகளே இல்லாத கரோனா மையங்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தச்சூழலில், கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கையாகும். அவ்வாறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும், பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com