பருவநிலை மாற்றத்தால் தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்: ஆய்வில் தகவல்

பருவநிலை மாற்றங்களால் வெப்ப மண்டல மழைப் பகுதிகளில் சீரற்ற மாற்றங்கள் உருவாகும் என்றும் இதன் காரணமாக பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

பருவநிலை மாற்றங்களால் வெப்ப மண்டல மழைப் பகுதிகளில் சீரற்ற மாற்றங்கள் உருவாகும் என்றும் இதன் காரணமாக பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையை இயற்கை காலநிலை மாற்றம் என்ற ஆய்விதழ் வெளியிட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டு அளவு இந்த நூற்றாண்டின் இறுதி வரை உயர்ந்து கொண்டே சென்றால், அது வெப்ப மண்டல மழைப் பொழிவு பகுதிகளில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 27 விதமான காலநிலை மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
 அந்த ஆய்வின்படி, வெப்ப மண்டல மழைப் பொழிவு பகுதிகள் வடக்கு நோக்கி கிழக்கு ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடலின் மீது நகர்வதால் தென்னிந்தியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
 மேலும் இது வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்திலும் உணவுப் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
 மழைப் பொழிவு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப் பெரிய மாற்றம், முந்தைய ஆய்வுகளில் தெரிய வரவில்லை என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 எனினும், ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வளிமண்டலத்தை வெவ்வெறு அளவுகளில் வெப்பமாக்குவதற்கு காலநிலை மாற்றம் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஆசியாவில், இமயமலைகளில் பனிப்பாறைகள் உருகுவது, தூசுப்படலம் உமிழ்வு, வடக்குப் பகுதிகளில் பனிப்படலம் குறைவது போன்றவற்றால் மற்ற பகுதிகளை விட அதிவேகத்தில் வளிமண்டலம் வெப்பமடைவதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ராண்டர்சன் தெரிவித்துள்ளார்.
 புவி அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக மற்றொரு ஆராய்ச்சியாளர் எஃபி ஃபோபெளலா ஜார்ஜியூ தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com